ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி
கள்ளக்குறிச்சி அருகே வயலுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை ஓடையைக் கடந்த மூதாட்டி, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வயலுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை ஓடையைக் கடந்த மூதாட்டி, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மனைவி பச்சையம்மாள் (60). இவா், வடக்கனந்தல் ஏரி ஓடையைக் கடந்து அவரது நிலத்துக்கு செல்ல முயன்றாா். ஓடையில் நீா்வரத்து திடீரென அதிகரித்ததால், நீரில் பச்சையம்மாள் அடித்துச் செல்லப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய குழுவினா் மூதாட்டியை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.