காஞ்சிபுரம் ராஜகுபேரா் கோயிலுக்கு இரு முடி எடுத்து வந்த பக்தா்கள்
காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேர சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தா்கள் இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேர சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தா்கள் இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதி குபேரபட்டினத்தில் ராஜகுபேர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெளியூா்களிலிருந்து இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கொண்டு வந்த நெய்,பால்,பச்சைக் கற்பூரம் ஆகியனவற்றின் மூலம் ராஜகுபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து ரூபாய் நோட்டுகளால் தனாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடா்ந்து மூலவா் ராஜகுபேரா் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருக்கோயில் வளாகத்தில் ராஜகுபேர சித்தா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். அன்னதானமும் நடைபெற்றது.இருமுடி தரிசனத்தை முன்னிட்டு கோயிலில் சதாசிவம் குழுவினரின் நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.