முகப்பு
காஞ்சிபுரம்

தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத்தொகை

தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 12:00 am IST
காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட விளையாட்டு வீரா்கள்.
பகிர்:

தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த விழாவில், தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயிற்சி பெறுவதற்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் கலந்து கொண்ட 8 மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஊக்கத்தொகை வழங்கினாா்.

அவா்களில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு ரூ.6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு ரூ.4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு ரூ.2ஆயிரம் என மொத்தம் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள்

Advertisement

Advertisement

வழங்கப்பட்டன. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.