முகப்பு
கண்ணோட்டம்

நிர்வி கல்ப சமாதியில் சுவாமிஜி!

ஒருநாள் காலை உணவிற்கு முன்பாக சுவாமிஜி தமது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரது கையில் கீதை ஒன்று இருந்தது.

Updated On : 14 செப்டம்பர், 2013 at 5:38 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

ஒருநாள் காலை உணவிற்கு முன்பாக சுவாமிஜி தமது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரது கையில் கீதை ஒன்று இருந்தது. அவர் மெக்லவுடிடம், ஜோ, அதோ அந்தப் பைன் மரத்தடியில் உட்கார்ந்து கீதை படிக்கப் போகிறேன் . காலை உணவு தயாரானதும் வருகிறேன். காலை உணவு பிரமாதமாக இருக்க வேண்டும்' என்று கூறினார். அரை மணி நேரம் கழிந்து மெக்லவுட் சுவாமிஜியை அழைப்பதற்காக அங்கே சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

அசைவற்றதொரு சிலைபோல் சுவாமிஜி அமர்ந்திருந்தார். கீதை அவரது கையிலிருந்து நழுவி கீழே கிடந்தது. பாதி மூடிய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரால் அவரது ஆடை நனைந்திருந்தது. மெக்லவுட் அருகில் சென்று பார்த்தார். மூச்சு முற்றிலுமாக நின்றிருந்தது. சுவாமிஜி இறந்து விட்டார் என்று பயந்து போய், விரைவில் லெக்கட்டிடம் சென்று, 'ஓடி வாருங்கள். சுவாமி விவேகானந்தர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்' என்று கூறினார். பெற்றி, லெக்கட் எல்லோரும் அங்கே ஓடினார்கள். சுவாமிஜியின் நிலைமையைக் கண்டு அனைவரும் அழத் தொடங்கினர்.

ஏழெட்டு நிமிடங்கள் கழிந்தன. சுவாமிஜியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. திடீரென்று லெக்கட், இல்லை. அவர் சமாதியில் இருக்கிறார். அவரை உலக்கி உணர்வை மீட்போம்' என்று கூறியபடி சுவாமிஜியை நெருங்கினார். ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் யோது தம்மை யாரும் தொடக் கூடாது என்று சுவாமிஜி கூறியிருந்தது மெக்லவுடின் நிகைவிற்கு வந்தது. உடனே, வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்' என்று கத்தினார் மெக்லவுட்.

Advertisement

மேலும் ஐந்தாறு நிமிடங்கள் கழிந்தன. அப்போது சுவாமிஜி மூச்சுவிடுவதற்கான அறிகுறிகள் தென்படலாயின. அவரது கண்கள் மெதுவாகத் திறந்தன. ஏதோ தமக்குள் பேசுவதுபோல், 'நான் யார்? நான் எங்கிருக்கிறேன்?' என்று இரண்டு மூன்று முறை கூறினார். அதன்பிறகு அவருக்குப் புறவுணர்வு முற்றிலுமாக வந்தது. எங்களைப் பார்த்தார். சற்றே வெட்கத்துடன் எழுந்தார். 'உங்களையெல்லாம் பயமுறுத்தி விட்டேனா! பொறுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய நிலை எனக்கு அடிக்கடி வருவதுண்டு. பயப்படாதீர்கள். இறந்துவிட மாட்டேன்.  உங்கள் நாட்டில் நான் என் உடம்பை விட மாட்டேன். பெற்றி, பசியாக இருக்கிறது, சாப்பிடப் போவோம்' என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

சுவாமிஜி மிக உயர்ந்த நிலையாகிய நிர்விகல்ப சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த சம்பங்களுள் இது ஒன்றாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.