கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானது குறித்து...
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயர் என்ற சீனப்பா (65). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், புதன்கிழமை அதிகாலை நேரலகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் செல்லும் சாலையில் உள்ள முனியப்பன் கோயில் அருகே சென்றபோது,
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சீனப்பாவை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சீனப்பா உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்கா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.
Regarding the death of a worker attacked by a wild elephant near Krishnagiri...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.