FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காட்டு யானை தாக்கி விவசாயி பலி!

காட்டு யானை தாக்கி விவசாயி பலியானது தொடர்பாக...

Updated On : 14 ஜூலை 2026, 12:55 pm IST
காட்டு யானை தாக்கி விவசாயி பலி! - படம்: தினமணி
பகிர்:

கோவை: மதுக்கரை ஒன்றியம் மாவூத்தம்பதி அருகே, காட்டு யானை தாக்கி, விவசாயி பலியானார்.

புதுபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜ் (72) இன்று(ஜூலை 14) காலை வழக்கம்போல, அவரது தோட்டத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை அவரை திடீரென தாக்கியது.

இதில் அவர் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து நடராஜ், 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நடராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

summary

A farmer was killed in an attack by a wild elephant near Mavuthampathi in Madukkarai Union.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments