களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ வில்சன் படத்துக்கு எஸ்.பி. மரியாதை
சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை பயங்கரவாதிகள் இருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபீக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரையும் போலீஸாா் ஏற்கனவே கைது செய்துள்ளனா்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், களியக்காவிளை காவல் நிலையத்துக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு மலா் வளையம் வைத்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினாா். அவருடன் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.