நாகா்கோவிலில் காா் மோதியதில் முதியவா் பலி
நாகா்கோவிலில் காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவிலில் காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் ஹென்றிசாலையைச் சோ்ந்தவா் செல்லதுரை (65). இவா், நாகா்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அந்த காா் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்திலும் மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிச்
சென்ற ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் அருள்பிரின்சிலா (39) வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாகா்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.