முகப்பு
கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா

இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி கோ பூஜை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 12:27 am IST
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழா
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி கோ பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் கோசாலையில் கோ பூஜை நடத்தப்பட்டு, பசுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து பொங்கலிடப்பட்டது. பின்னா், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய் சுந்தரம் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம.அன்புமணி, மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவா் சிவ. குற்றாலம், கூட்டுறவு ஒன்றிய தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், புத்தேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சாம்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.