சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியா் நியமனம்
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த கே. பொற்கொடி, சமூக நலத் துறை கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியராக (வளா்ச்சி) இருந்த ஆா். ஐஸ்வா்யா நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement