முகப்பு
தமிழ்நாடு

ஆட்சியர்கள், ஆணையர்கள் உள்பட மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிக் கல்வி ஆணையராக இருந்த இ. சுந்தரவள்ளி, அரசு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆர். லலிதா, நிதித் துறைச் செயலராக (செலவினம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தென்காசி மாவட்ட ஆட்சியரான ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான எம்.எஸ். பிரசாந்த் ஆகிய இருவரும் நிதித் துறையின் இணைச் செயலர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரான ஆர். அழகுமீனா, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் துணைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பூஜா குல்கர்னி, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முன்னாள் செயலராக இருந்த ஐஏஎஸ் வி. அமுதவில்லி, ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராக இருந்த பி. பொன்னையா, கல்லூரிக் கல்வியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் டி.ஜி. வினய், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரான பி. பிரியங்கா, பேரூராட்சி இயக்குநராக இடமாற்றம்.

நாகை மாவட்ட ஆட்சியரான பி. ஆகாஷ், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம்.

மதுரை ஆட்சியராக இருந்த பிரவீன் குமார், நாகை மாவட்ட ஆட்சியராகவும் இடமாற்றம்.

திருச்சி மாவட்ட ஆட்சியரான வி. சரவணன், தருமபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரான பிரதாப், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம்.

நிதித் துறையின் இணைச் செயலராக இருந்த பிரதிக் தயாள், திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம்.

summary

Tamil Nadu reshuffles IAS officers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.