முகப்பு
தமிழ்நாடு

மதுரை ஆணையராக கபில் குமார்! 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது பற்றி...

Updated On : 4 ஜூன் 2026, 6:51 pm IST
தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவை அரசு, வியாழக்கிழமை (ஜூன் 4) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர காவல் ஆணையராக கபில் குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர ஆணையராக இருந்த அபிஷேக் தீக்‌ஷித், சென்னை ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ஜெ. லோகநாதன், தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர். திருநாவுக்கரசு, நெல்லை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி பி. பகலவன், சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு இணை ஆணையராக இருந்த திஷா மிட்டல், சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு இணை ஆணையராக இருந்த பண்டி கங்காதர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

summary

The government issued an order on Thursday (June 4) transferring seven IPS officers in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.