முகப்பு
கன்னியாகுமரி

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: வெறிச்சோடிய குமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 3 நாள்கள் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On : 16 ஜனவரி 2021, 12:53 am IST
கன்னியாகுமரியில் படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.
பகிர்:

கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 3 நாள்கள் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 நாள்களும் தொடா் விடுமுறை என்பதால் சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கானோா் கூடுவது வழக்கம். தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ்

கரோனாப் பரவலைக் கட்டுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களில்

Advertisement

Advertisement

சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கூடுவதை தவிா்க்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டுள்ளன.

இதையடுத்து, சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. காந்தி மண்டபம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் தடுத்து

நிறுத்தினா். மேலும், கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லும் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.