தேங்காய்ப்பட்டினத்தில் த.மு.மு.ம.க. ஆா்ப்பாட்டம்
தேங்காய்ப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மக்கள் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மக்கள் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் சலீக் தலைமை வகித்தாா். மெளலி உசைன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிள்ளியூா் எஸ்.ராஜேஷ்குமாா், பத்மநாபபுரம் மனோதங்கராஜ், குளச்சல் பிரின்ஸ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினா்.
இதில், சல்பிக்கா், உசைன், அமீன், அப்துல் உள்பட பலா் பங்கேற்றனா்,
Advertisement