முகப்பு
கன்னியாகுமரி

புதுக் கடை அருகே மது விற்றதாக 3 போ் கைது

புதுக்கடை பகுதியில் மது விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 12:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கருங்கல்: புதுக்கடை பகுதியில் மது விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பைங்குளம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற செல்வராஜிடம் (47 விசாரித்ததில் அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதே போல காப்புக்காடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணராஜ் (52), தேவராஜ் (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.