தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி: கரூர் பள்ளி மாணவர் தேர்வு
மத்தியபிரதேச மாநிலம், தேவாஸ் நகரில் நடைபெற உள்ள தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழக அணியின்
மத்தியபிரதேச மாநிலம், தேவாஸ் நகரில் நடைபெற உள்ள தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்க கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2013-14-ம் ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் தேர்வு போட்டி இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமத்தால் சேலம் உருக்காலை வளாக மைதானத்தில் கடந்த 19-ம் தேதி நடத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கரூர் காக்காவாடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி பிளஸ் 1 மாணவர் டி.ஏ. அருள் சபரீஸ்வரன் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
Advertisement
Advertisement
இதன் மூலம் அக்டோபர் 1-ம் தேதி தேவாஸ் நகரில் நடைபெறும் தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டிக்குத் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.
தேர்வு பெற்ற மாணவரையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் பி. அம்மையப்பன், துணைத் தலைவர் பி. கணேசன், கௌரவ கல்வி ஆலோசகர் வி. சீனிவாசன், தலைமையாசிரியர் டி. பிரகாசம் ஆகியோர் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.