மாநில தகவல் ஆணையர் கரூரில் ஆய்வு
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில தகவல் ஆணையர் பி. தமிழ்ச்செல்வன் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதிலளிக்காமல் இருக்கக் கூடாது. அதேபோல அளிக்கப்படும் தகவல்கள் முழுமையாகவும், விவரமாகவும் அளிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.
Advertisement
Advertisement
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பதிலளிக்கும் அலுவலர்கள் யார், யார் போன்ற விவரங்கள் குறித்து தகவல் ஆணையர் பயிற்சி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, கோட்டாட்சியர் நெல்லைவேந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.