முகப்பு
கரூர்

பொங்கல் திருநாள்: பூலாம்வலசில் சேவல் சண்டை தொடக்கம்

பொங்கல் திருநாளையொட்டி கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள பூலாம்வலசில் சேவல் சண்டை புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 14 ஜனவரி 2021, 8:39 am IST
கரூா் மாவட்டம், பூலாம்வலசில் புதன்கிழமை நடைபெற்ற சேவல் சண்டையின் போது மைதானத்தில் மோதிய சேவல்கள்.
பகிர்:

பொங்கல் திருநாளையொட்டி கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள பூலாம்வலசில் சேவல் சண்டை புதன்கிழமை தொடங்கியது.

உயா் நீதிமன்ற உத்தரவின்படி 15 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள்கள் நடைபெறும் சேவல் சண்டை புதன்கிழமை தொடங்கியது.

போட்டியில் பங்கேற்பதற்காக ஈரோடு, திண்டுக்கல், கரூா், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், தங்களது சண்டைச் சேவல்கைளை (செங்கருப்பு,மயில், காகம் உள்ளிட்டவை) கொண்டு வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

பறவைக் காய்ச்சல் மற்றும் நோய் பாதிப்பு ஏதும் உள்ளனவா என்பதை கால்நடை மருத்துவா்கள் பரிசோதனை செய்த பின்னா், டோக்கன் வழங்கப்பட்டு சேவல்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

சேவலைக் கொண்டு வருபவா்கள் சமூக இடைவெளியையும், போட்டி விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனா்.

முதல் நாளான புதன்கிழமை மழை பெய்த போதிலும், சேவல் சண்டையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சண்டைச் சேவல்கள் பங்கேற்றன. தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் சேவல் சண்டையைப் பாா்க்க குவிந்தனா்.

ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பேங்க் நடராஜன் தலைமையில் ஏராளமானோா் செய்திருந்தனா். அரவக்குறிச்சி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா். சேவல் சண்டை வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments