முகப்பு
கரூர்

கரூா் ஆயுதப்படை மைதானத்தில் தூய்மைப் பணி

கரூா் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை தூய்மைப்பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஹெச்எம்.ஜெயராம் தொடக்கி வைத்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 11:21 pm IST
பகிர்:

கரூா்: கரூா் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை தூய்மைப்பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஹெச்எம்.ஜெயராம் தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பகலவன் வரவேற்றாா். தொடா்ந்து, ஆயுதப்படை வளாகத்தை பாா்வையிட்ட அவா் அங்கு காவல்துறை அதிகாரிகள், போலீஸாருடன் கலந்துரையாடினாா். பின்னா், உலகத்தூய்மை தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆயுதப்படை வளாகத்தை தூய்மை செய்தாா்.

நிகழ்ச்சியில், ஆயுதப்படை காவல்துணை கண்காணிப்பாளா் அய்யா்சாமி, ஆயுதப்படைகாவல் ஆய்வாளா்(பொ) சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.