கிளியக்கா
கிளியக்கா கிளியக்கா எங்கே போறீங்க?
கிளியக்கா கிளியக்கா
எங்கே போறீங்க?
மாமரத்தில் பழம் இருக்கு
Advertisement
கொத்தப் போறேங்க!
மயிலக்கா மயிலக்கா
எங்கே போறீங்க?
மழை வருது மழை வருது
ஆடப் போறேங்க!
குயிலக்கா குயிலக்கா
எங்கே போறீங்க?
காட்டுக்குள்ள பாட்டுப் போட்டி
பாடப் போறேங்க!
-ச.கல்பனா,
ஐந்தாம் வகுப்பு,
வள்ளிப்பட்டு ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளி,
வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்.