ஓய்வூதியர்களின் குறைகளை விரைந்து தீர்க்க அறிவுறுத்தல்
ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ்
ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடும்ப நல நிதி உள்ளிட்ட 65 மனுக்கள் வரப்பெற்றன.
Advertisement
Advertisement
மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பேசியது:
ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு மட்டுமே உள்ளது.
அரசுப் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஒய்வுபெற்ற அவர்களது குறைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விரைவில் அனைத்து மனுக்களுக்கும் ஒப்பளிப்பு பெற்று காசோலை கிடைக்கவும், ஓய்வூதியதாரர்களை நல்லமுறையில் வரவேற்று அவர்களது குறைகளை இன்முகத்துடன் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம், ஓய்வூதிய நலத் துறை இணை இயக்குநர் பி.தேவராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முகம்மது பருக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.