இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை நாடகம்: தங்கம் தென்னரசு
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு விமர்சனம்.
தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், ஆழம் தெரியாமல் காலைவிட்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
Advertisement
Advertisement
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
White Paper drama to mask incompetence: DMK Thangam Thennarasu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.