புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு
புதுச்சேரியில் திமுகவை சீரமைக்க தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பது பற்றி...
புதுச்சேரியில் திமுகவை சீரமைக்க தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழக வெளியிட்ட அறிவிப்பு: கட்சி பவளவிழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக்கழகம் புத்தெழுச்சியைப் பெற - அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடையை, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக்கு குழுவானது பல்வேறு பரிந்துரைகளை தலைவரிடம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்பணி முழுவேகத்தில் நடைபெறும் அதே சமயத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
எனவே, புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக சீரமைப்புகள் குறித்தும் தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக்குழு, நவம்பர் 10-ஆம் தேதிக்குள் தனது பரிந்துரைகளை வழங்கிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A reorganization committee headed by Thangam Thennarasu has been set up to restructure the DMK in Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.