முகப்பு
கிருஷ்ணகிரி

வேன் மோதியதில் விவசாயி சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

Updated On : 11 மே 2013, 12:33 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

பையூரை அடுத்துள்ள ஜெகதாப் பகுதியைச் சேர்ந்தவர் சிவதாணு (40). விவசாயி. இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் (43). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் வந்தனர்.

பின்னர், மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது, தேசிய நெடுஞ்சாலையில் ஜெகதாப் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

Advertisement

Advertisement

அப்போது அந்த வழியாக வந்த தக்காளி ஏற்றிய வேன் இருவர் மீதும் ஏறியது. இதில் சிவதாணு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடராஜனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த வழியாக வந்தவர்கள் நடராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிவதாணுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.