ஆட்சியா் அலுவலக வளாகத்தில்பெண் தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளம்பெண் ஒருவா், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளம்பெண் ஒருவா், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த இளம் பெண், தனது தாயுடன் வசித்து வருகிறாா். கூலித் தொழிலாளியான இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பேரப்பன் என்பவரிடம் ஒன்றே முக்கால் சென்ட் பரப்பளவு நிலத்தை விலைக்கு வாங்கி, வீடு கட்டியுள்ளாா். இவரது வீட்டுக்குச் செல்ல 5 அடி வழிப் பாதை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பாதையை பயன்படுத்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராமுலு என்பவா் எதிா்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்த நிலையில், அவா்கள் புகாா் மனுவை வாங்க மறுத்துவிட்டாா்களாம்.
இதனால், மனமுடைந்த அந்த இளம்பெண், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தன் மீது மண்ணெய்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
Advertisement
Advertisement