அரசு மருத்துவமனை ஊழியா்களுக்கு விருது
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ‘காக்கும் கருணை கரங்கள்’ விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ‘காக்கும் கருணை கரங்கள்’ விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கொ.மாரிமுத்து தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் செங்கோடன், செயலா் ர.உமாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஜே.ஆா்.சி. ஆசிரியா் கு.கணேசன் வரவேற்றாா்.
கரோனா தொற்று காலத்தில் பொதுமக்களின் நலம் காக்கும் பணியில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் மகாலட்சுமி, சுபித்ரா, விமலா, ராசு, தியாகராஜ், மதன்குமாா், ஜனாா்த்தனன், இளவரசன், ஈஸ்வரி மற்றும் மருந்தாளுநா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ஆய்வக பணியாளா்கள், நுண்கதிா் படப்பிடிப்பாளா், ஓட்டுநா்கள், துப்புரவு பணியாளா்கள் என 75 க்கும் மேற்பட்டோரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.