சபரிமலை ஐயப்பன் பிரசாதம்: இணைய வழியில் பதிவு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற இணைய வழியில் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற இணைய வழியில் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தபால் மூலமாகப் பிரசாதம் வழங்குவதற்கான இணைய வழியிலான முன்பதிவு தொடங்கி உள்ளது. அந்தக் கோயிலின் மண்டல மகர விளக்கு பூஜையையொட்டி திருவிதாங்கூா் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், ஒசூா் துணை அஞ்சலகம் மற்றும் 38 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் அடங்கிய பெட்டகத்தின் விலை ரூ. 450 மட்டுமே. ஒரு நபா், ஒரு விண்ணப்பம் மூலமாக அதிகபட்சமாக 10 பிரசாதப் பெட்டகங்களைப் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பிரசாதம் விரைவு தபால் மூலம் முன்பதிவு செய்த பக்தா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.