முகப்பு
செய்திகள்

கண்ணீருடன் வெளியேறிய லூக்கா மாட்ரிச், நெய்மர், ரொனால்டோ..! மெஸ்ஸி மட்டுமே நீடிப்பு!

கால்பந்து உலகக் கோப்பையில் கண்ணீருடன் விடைபெற்ற லெஜண்ட்ஸ் குறித்து...

Updated On : 7 ஜூலை 2026, 7:40 pm IST
லூக்கா மாட்ரிச், நெய்மர், ரொனால்டோ, மெஸ்ஸி. - படங்கள்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் லெஜண்ட்ஸாக இருந்த லூக்கா மாட்ரிச், நெய்மர் ஜூனியர், கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்களது கடைசி உலகக் கோப்பையில் கண்ணீருடன் வெளியேறியுள்ளார்கள்.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. 48 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் இதுவரை காறுதிக்காக 6 அணிகள்தேர்வாகியுள்ளன.

இந்த உலகக் கோப்பை பல லெஜண்ட்ஸுக்கு கடைசியாக இருக்கிறது. குரேஷியாவின் கேப்டன் லூக்கா மாட்ரிச் (40 வயது), பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் (34 வயது), போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ (41 வயது), ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கிறது.

Advertisement

Advertisement

இதில் லூக்கா மாட்ரிச், நெய்மர் தங்களது ஓய்வை அறிவித்துவிட்டார்கள். ரொனால்டோ ஓய்வை அறிவிக்காவிட்டாலும் இதுதான் அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கிறது.

இந்த ஜாம்பவான்கள் தங்களது கடைசி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியபோது கண்ணீருடன் வெளியேறினார்கள். இந்த உலகக் கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது.

ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மட்டுமே இந்தப் பட்டியலில் மீதமிருக்கிறார். இன்றிரவு 9.30 மணிக்கு எகிப்துடன் விளையாடவிருக்கிறார். இதில் வென்றால் மெஸ்ஸியின் அணி காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Luka Modric, Neymar, and Ronaldo left in tears... Only Messi remains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments