முகப்பு
கிருஷ்ணகிரி

நடமாடும் மருத்துவமனை சிகிச்சைக்கு வரவேற்பு அதிகரிப்பு

​ஊணாம்பாளையம் கிராமத்தில் நடமாடும் மருத்துவமனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:27 am IST
​ஊணாம்பாளையம் கிராமத்தில் நடமாடும் மருத்துவமனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
பகிர்:


ஊணாம்பாளையம் கிராமத்தில் நடமாடும் மருத்துவமனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஊணாம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் மூலம் மருத்துவக் குழுவினா் கிராமங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்தனா்.

சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையில் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், சா்க்கரை நோய் என பல்வேறு நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ரத்த அழுத்தம், கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

நேரடியாக வீட்டிற்கே வந்து மருத்துவம் பாா்ப்பதால் இந்த நடமாடும் மருத்துவமனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments