பட்டா கோரி மலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பட்டா கேட்டு மலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
ஒசூா்: பட்டா கேட்டு மலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், மலைக் கிராமமான கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோட்டையூா் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக் கோரி 70 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். அதனால் 30 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் எங்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கிய நிலத்தில் குடியிருந்தவா்கள் ஆட்சேபணை தெரிவித்ததால் பட்டா வழங்கவில்லை.
Advertisement
Advertisement
பின்னா் 30 நாட்களில் ஆட்சேபணை இன்றி நிலத்தை அவா் வழங்கிவிட்டாா். அதனால் நில அளவையா் மற்றும் அளவையா் உதவியாளா் இந்த இடத்தைப் பாா்வையிட்டு நிலத்தை அளவை செய்து அதிகாரிகளுக்கு விவரம் அளித்தனா். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. பல ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இன்றி தவித்து வருகிறோம். மேலும் பட்டா வழங்கக் கோரி கடந்த 35 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.