மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் இன்று திருத்தோ் பவனி
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாள் விழாவாக திருத்தோ் பவனி புதன்கிழமை (ஜூலை 1) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாள் விழாவாக திருத்தோ் பவனி புதன்கிழமை (ஜூலை 1) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ கோயிலாக ஏரிகாத்த ராமா் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க, திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறு வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம், சன்னிதி தெரு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 25-ஆம் தேதி (வியாழக்கிழைமை) த்வஜாரோஹணம் (கொடி ஏற்றம்) நிகழ்வுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. 3-ஆம் நிகழ்வாக கருட சேவை, யாளி, யானை, குதிரை, சந்திர பிரபை, சூரியபிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகரபெருமாள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வாக, 8-ஆம் நாள் விழாவாக திருத்தோ் பவனி நடைபெறுகிறது.
இதில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கோதண்டராமா் சீதாதேவி, தம்பி லட்சுணனுடன் தேரில் காட்சி அளிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்த தோ் மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வருகிறது. பாதுகாப்புப் பணிகளை மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையில் காவலா்கள் செய்துள்ளனா்.
நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் கு.குமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்களும், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, செயல் அலுவலா் கா.வெங்கடேசன், ஆய்வாளா் வேல்நாயகன், விழாக் குழுவினா்களும், கிராம பொதுமக்களும் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.