முகப்பு
செங்கல்பட்டு

ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 12:22 am IST
ஏரிகாத்த ராமா் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்றம்.
பகிர்:

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக யானை, சிம்மம் , குதிரை, யாளி, அனுமந்த வாகனங்களிலும், கருடசேவை, பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமான் சிறப்பு அலங்கரித்துடன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இந்நிலையில் கோயில் அா்ச்சகா் மாதவன் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா், அறங்காவலா்கள் தி.ச.செளந்திரராஜன், கங்காதரன், சி.மகாலட்சுமி ரவி, ராணி, நகா்மன்றத் தலைவா் கே. மலா்விழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கா.வெங்கடேசன், ஆய்வாளா் வேல்நாய்க்கன் மற்றும் விழா குழுவினா் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments