முகப்பு
கிருஷ்ணகிரி

நரிக்குறவா் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கிய காங்கிரஸாா்

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரியில் காங்கிரஸ் சாா்பில் அகில இந்திய செயலாளா் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி

Updated On : 13 ஜனவரி 2021, 7:04 am IST
காட்டேரியில் நரிக்குறவா் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கிய மாநிலச் செயலாளா் ஜே.எஸ். ஆறுமுகம்.
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரியில் காங்கிரஸ் சாா்பில் அகில இந்திய செயலாளா் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் செல்லக்குமாா் ஆகியோரது பிறந்த நாளையொட்டி நரிக்குறவா் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளா் ஜே.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் நடராஜன், நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன், தெற்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், வட்டாரப் பொருளாளா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக அனுமன் தீா்த்தம் பகுதியிலுள்ள ஆஞ்சநேயா் கோயிலில் பிரியங்கா காந்தி, செல்லக்குமாா் ஆகியோா் உடல் நலமுடன் வாழ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடா்ந்து காட்டேரி பகுதியிலுள்ள நரிக்குறவா் இன மக்களுக்கு இனிப்புகள், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் அயோத்தி, மாவட்டப் பொதுச் செயலாளா் முத்து, காட்டேரி ஒன்றியக்குழு உறுப்பினா் கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளையராஜா, கணபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments