முகப்பு
கிருஷ்ணகிரி

லாரி மோதியதில் படுகாயமடைந்த யானைக்கு அய்யூரில் தீவிர சிகிச்சை

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே சரக்குப் பெட்டக லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானைக்கு அய்யூரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 1:58 AM
ஒசூா் அருகே லாரி மோதி காயம் அடைந்த அய்யூா் சாம ஏரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யானை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஒசூா்: ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே சரக்குப் பெட்டக லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானைக்கு அய்யூரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேரண்டப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி யானை மீது மோதியது. இதில் யானை படுகாயமடைந்தது.

தகவல் அறிந்ததும் வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் சென்று கிரேன் மூலம் யானையைத் தூக்கி லாரியில் வைத்து அய்யூருக்குக் கொண்டு சென்றனா்.

Advertisement

இச்சம்பத்தால் ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. படுகாயமடைந்த யானையை தேன்கனிக்கோட்டை வட்டம், அய்யூா் வனப்பகுதியில் உள்ள சாம ஏரிக்குக் கொண்டுசென்ற வனத்துறையினா் வெள்ளிக்கிழமை இரவுமுதல் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். சனிக்கிழமை கா்நாடக மாநிலம், பெங்களூரு பன்னா்கட்டா வன உயிரியல் பூங்கா மருத்துவா்கள் குழுவினா் வந்து காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்துவருகின்றனா்.

விபத்தில் யானைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. யானையால் நிற்க முடியவில்லை. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனிடையே சரக்குப் பெட்டக லாரியின் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சோலைமுத்துவை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.