முகப்பு
தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அனைத்துக்கட்சிகளுக்கும் எச்சரிக்கை மணி: ஜெகதீஷ்ஷெட்டர்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற சில வார்டுகளை மட்டுமே இழந்துள்ளது. மற்றபடி பாஜகவின் செல்வாக்கு எந்த வகையிலும் குறைய வில்லை என்பதனை

Updated On : 11 மார்ச் 2013, 8:00 pm IST
பகிர்:

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அனைத்துக் கட்சிகளுக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற சில வார்டுகளை மட்டுமே இழந்துள்ளது. மற்றபடி பாஜகவின் செல்வாக்கு எந்த வகையிலும் குறைய வில்லை என்பதனை நாங்கள் பெற்றுள்ள வார்டுகளின் எண்ணிக்கை நிரூபித்துள்ளன. இது சட்டபேரவைக்கான எச்சரிக்கை மணியாகவே பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த வளர்ச்சிப்பணிகளை பாராட்டியே மக்கள் எங்களை ஆதரித்து வாக்களித்துள்ளனர். ஆனால் சில சதம் வாக்குகளை நாங்கள் இழந்துள்ளதற்கு எங்கள் உட்கட்சி பூசலும் ஒரு காரணம். பல்வேறு பிரச்னைகளை அடுக்கடுக்காக சந்தித்த கட்சி இந்தளவிற்கு வார்டுகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது பெரும் சாதனையாகவே கருதுகிறேன். இதனை வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் நாங்கள் சரி செய்து கொண்டு கர்நாடகத்தில் பெரும் சக்தியாக திகழ்வோம். சுயேச்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.