முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் சமாஜ்வாதி பிரமுகர் கொலை : ஒருவர் கைது

தில்லியில், சமாஜ்வாதி பிரமுகர் தீபக் பரத்வாஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 1 ஏப்ரல் 2013, 11:44 am IST
பகிர்:

தில்லியில், சமாஜ்வாதி பிரமுகர் தீபக் பரத்வாஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கோடீஸ்வரருமான தீபக் பரத்வாஜ், கடந்த வாரம், அவரது பண்ணை வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்துள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக வைத்து புருஷோத்தமன் ரானா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.