முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்வோம்: ராஜ்நாத் சிங்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியில் வலுத்து வருகிறது. அதேவேளையில், மோடியை வரவிடக் கூடாது என்ற நோக்கில்

Updated On : 21 ஏப்ரல் 2013, 7:52 pm IST
பகிர்:

பிரதமர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியில் வலுத்து வருகிறது. அதேவேளையில், மோடியை வரவிடக் கூடாது என்ற நோக்கில், பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்குமாறு பா.ஜ.க.வுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், சிவசேனையும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.. இவ்விவகாரம் குறித்து, அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

பிரதமர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நேரத்தில் கூடி, முடிவு செய்யும். கட்சியில் சில தலைவர்கள் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு கோருவது குறித்துக் கேட்கிறீர்கள். யாரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது அல்லது யாரையாவது அப்படி முன்னிறுத்த வேண்டுமா என்பது குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும். எங்கள் கட்சியில் போட்டி எதுவும் இல்லை எனக் கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.