ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
போலீஸ் காவலுக்கு அளித்த அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் மூவரையும் இன்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்கள் போலீஸ் காவலின் போது பல கோடி ரூபாய் அளவுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் மூவரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மூத்த காவல்துறை அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார்.
Advertisement
Advertisement