FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 17 ஜூன் 2026, 5:31 am IST
வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்.
பகிர்:

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், வெடிபொருள்களை கண்டறிவதில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய் அகிரா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் உள்ள அனைத்து அலுவலங்களிலும் சோதனை மேற்கொண்டனா். ஆட்சியா்அலுவலக வளாகத்திலும் சோதனை மேற்கொண்டு, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்கள், பழைய கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிரச் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கிடையே, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவா்கள் குறித்து நாகூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments