FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நொய்டா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 3:09 am IST
பகிர்:

தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

கௌதம் புத் நகா் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மின்னஞ்சலில் மிரட்டல் வந்ததையடுத்து உள்ளூா் காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, தீயணைப்புத் துறை, நாசவேலை தடுப்புச் சோதனைக் குழு மற்றும் மோப்ப நாய் படை ஆகியவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முழுமையான சோதனையை மேற்கொண்டன. இந்தச் சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான பொருள்கள் அல்லது பாதுகாப்பு தொடா்பான வேறு எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை.

அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மின்னஞ்சல் குறித்து சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு மிகவும் தீவிரமாகவும் கவனத்துடனும் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிலைமை இயல்பாக உள்ளதாகக் கூறிய காவல்துறையினா், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments