FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:17 am IST
திருவள்ளூா்  ஆட்சியா்  அலுவலகத்தில்  சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
பகிர்:

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இ--மெயில் முகவரிக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினா். இதில் எதுவும் சிக்காத நிலையில், இ-மெயிலில் வந்த தகவல் வதந்தி என தெரியவந்தது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (உம்ஹண்ப்) மூலம் வெடிகுண்டு மிரட்டலால் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்பநாய் மூலம் சோதனை செய்ததால் ஆட்சியா் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments