முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது. விசாரணைக்கு பிறகு, அது வெறும் புரளி என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.

Updated On : 3 ஜூலை 2026, 4:03 am IST
இஸ்ரோ - பிரதிப் படம்
பகிர்:

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது. விசாரணைக்கு பிறகு, அது வெறும் புரளி என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.

பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) வியாழக்கிழமை வந்த மின்னஞ்சலில், இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக சஞ்சய் நகா் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினருடன் இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு விரைந்த போலீஸாா், அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊழியா்களையும் வெளியேற்றி, அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

சில மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று போலீஸாா் உறுதி செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments