சீனிவாசனுக்கு பிசிசிஐ துணைத் தலைவர்கள் மிரட்டல்
பிசிசிஐ தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யாவிட்டால், துணைத் தலைவர் பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்து விடுவோம் என்று 5 துணைத் தலைவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிசிசிஐ தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யாவிட்டால், துணைத் தலைவர் பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்து விடுவோம் என்று 5 துணைத் தலைவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில், சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று நெருக்குதல் ஏற்பட்டது.
ஆனால், மிகவும் பிடிவாதமாக, சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கூறி வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீங்கள் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும். இல்லையேல், நாங்கள் எங்களது பதவியில் இருந்து விலகிவிடுவோம் என்று அருண் ஜெய்ட்லி உட்பட 5 பிசிசிஐ துணைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.