நிறம் மாறிய சபரிமலை தங்க மேற்கூரை! பக்தர்கள் அதிர்ச்சி!
சபரிமலை தங்க மேற்கூரை நிறம் மாறியது பற்றி...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க மேற்கூரை நிறம் மாறிய நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகார் தற்போது விசாரணையில் இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 15 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
ஜூன் 19 வரை நாள்தோறும் நடை திறக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐயப்பன் கோயிலின் தங்க மேற்கூரையில் நேற்று கருப்பு நிற திராவியம் போன்ற கரை படிந்திருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கத்தை பிரித்தெடுக்க யாரேனும் திராவகம் வீசினார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பக்தர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பக்தர்கள் நெய்யை வீசியதால் ஏற்பட்ட கரையாக இருக்கக் கூடும் என்று முதல்கட்டத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், திராவகமாக இருக்குமா என்ற கோணத்திலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sabarimala's golden roof changes color - Devotees shocked
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.