முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை அமலுக்கு வந்தது

பாதுகாப்பு துறைக்கான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை 2013 ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, தளவாட கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும்.ராணுவ தளவாடங்களை உள்நாட்டில்

Updated On : 1 ஜூன் 2013, 6:16 pm IST
பகிர்:

முறைகேடுகளைத் தடுக்கவும், உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வகை செய்யும் புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு துறைக்கான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை 2013 ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, தளவாட கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும்.ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கவும், கொள்முதல் நடவடிக்கையின்போது, உள் நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில்துறையினர் பயன்பெறுவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறுகையில், ""இந்த புதிய கொள்கை பாதுகாப்புத் துறைக்கும், தொழில் துறையினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கைகளை விரைவாக முடிக்கும் வகையில் அதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும்'' என்றார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டர் பேர ஊழல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும் இந்தப் புதிய கொள்கை உதவும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்புத் துறையை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments