முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளை

கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ராமு(60). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தற்போது இவர், கண் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ராமுவுக்கு உதவியாக

Updated On : 1 ஜூன் 2013, 5:49 pm IST
பகிர்:

கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ராமு(60). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தற்போது இவர், கண் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ராமுவுக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கி உள்ளனர்.

நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து ராமு மகன் பெருமாள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த கொடுங்கையூர் போலீஸார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments