முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.82 அடி

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.82 அடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 12 ஜூன் 2013, 12:05 pm IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.82 அடியாகக் குறைந்துள்ளது.

அணையின் முழு நீர் கொள்ளளவு 120 அடியாகும்.

அணைக்கு தற்போது வெறும் 60 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருவதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

Advertisement

Advertisement

ஆண்டு தோறும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் இருந்து ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால், அணை வறண்டு காணப்படுவதால், இந்த ஆண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.