FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் பாலாலயம்

Updated On : 17 ஜூன் 2026, 3:21 am IST
தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
பகிர்:

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி செவ்வாய்க்கிழமை பாலாலயம் நடைபெற்றது. முன்னதா, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, லட்சுமி, அஸ்த்ர ஹோமங்களுடன் வாஸ்த்து சாந்தி நடைபெற்றது. மாலையில் கும்ப அலங்காரம், விமான கலாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து புதன்கிழமை இரண்டாம்கால யாகசாலை, கால பூா்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, விமான படத்தில் கலசாபிசேகம் நடத்தி தீபாராதனை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை குடமுழுக்கு திருப்பணி கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments