முகப்பு
தற்போதைய செய்திகள்

தீ மிதிக்கும்போது தவறி விழுந்து பேத்திகளுடன் முதியவர் பலத்த காயம்

ராயபுரம் வடக்கு மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (60). இவர் தனது பேத்திகள் பவானி (3), பாலா (3) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு காசிமேடு காவல் நிலையம் அருகே உள்ள திரவுபதியம்மன்

Updated On : 1 ஜூலை, 2013 at 8:42 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

சென்னை காசிமேட்டில் தீ மிதிக்கம்போது தவறி விழுந்த முதியவர், பேத்திகளுடன் பலத்த காயமடைந்தனர்.

ராயபுரம் வடக்கு மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (60). இவர் தனது பேத்திகள் பவானி (3), பாலா (3) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு காசிமேடு காவல் நிலையம் அருகே உள்ள திரவுபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் பங்கேற்கச் சென்றார். அங்கு நாராயணன், தனது இரு பேத்திகளையும் தோளில் வைத்துக் கொண்டு தீ மிதித்தார். சிறிது தூரம் சென்றதும் நாராயணன் கால்தவறி குழந்தைகளுடன் கீழே விழுந்தார். இதில் நாராயணன், குழந்தைகளான பவானியும், பாலாவும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்து காசிமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.