முகப்பு
தற்போதைய செய்திகள்

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவன் உள்ளிட்ட 5 பேர் கைது

ஊத்துக்கோட்டை புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூசனம் (23). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரளா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம்

Updated On : 1 ஜூலை, 2013 at 2:25 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

ஊத்துக்கோட்டை புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூசனம் (23). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரளா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகபூசனம் சீர்வரிசையாக வழங்கப்பட்ட 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் நாக பூசனம், அவரது அக்கா கோவிந்தம்மாள், அவரது கணவர் முனுசாமி, உறவினர்கள் கருணாகரன், நாகவள்ளி ஆகிய 5 பேரும் சேர்ந்து சரளாவை அடித்து சித்ரவதை செய்தனர். ரூ. 1 1/2 லட்சம் வரதட்சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்துவேன் என்று சரளாவிடம் நாகபூசனம் கூறியுள்ளார்.

இதுகுறித்து சரளா ஊத்துக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்குப்பதிவு செய்து நாகபூசனம் உள்பட 5 பேரை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.